அரசுப் பணியாளர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சிங்காரம் தெரிவிக்கையில், மத்திய அரசு வழங்கிருப்பது போல் 3 சதவீத அகவிலைப்படியினை மாநில அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 1.7.2024 முதல் மத்திய அரசில் பணிபுரியும் அனைவருக்கும் 3 சதவீத அகவிலைப்படி ரொக்கமாக வழங்கியிருந்தது. இதை போல் மாநில அரசு பணியாளர்கள் ஆசிரியர்களுக்கு வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நிதி நெருக்கடியிலும் ஜூலை முதல் 3 சதவிகித அகவிலைப்படி ரொக்கமாக வழங்கியமைக்கு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.