கடலூர் மாவட்ட அளவிலான நூறாண்டுகள் கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு விழாவில் நூற்றாண்டு சுடரேற்றி அமைச்சர் தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான 100 ஆண்டுகள் கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு விழாவை விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு சுடர் இயற்றி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அமைச்சர் கணேசன், ஆசிரியர்கள், மாணவர்களுடன் நூற்றாண்டு உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு மாநில அளவில் 100 ஆண்டுகள் கடந்த அரசு பள்ளிகளில் நூற்றாண்டு விழாவினை கடந்த 22 அன்று முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாநில அளவில் தமிழ்நாடு துணை முதல்வர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சரால் நூற்றாண்டு விழா தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நூற்றாண்டு பள்ளியானது 1921 ஆம் ஆண்டில் துவக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டு இன்று விருத்தாசலம் சரகத்தின் 100 ஆண்டுகளைக் கடந்த சிறப்பு வாய்ந்த மேல்நிலைப் பள்ளியாக திகழ்வதில் நம் அனைவருக்கும் பெருமையே பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ள பல வல்லுனர்களை உருவாக்கிய பெருமைக்குரிய இப்பள்ளியில், தற்போது 850 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 42 ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பள்ளியில் பயின்று முன்னால் மாணவர்கள், தமிழ்நாடு அரசின் மருத்துவராக நீதிபதியாக வழக்கறிஞராக கலைத்துறையினராக என பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர்.
தற்பொழுது பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு சிறப்பு திட்டங்களை பயன்படுத்தி கல்வி பயின்று சிறப்பான எதிர்காலத்தினை உருவாக்கிட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், கல்வி அலுவலர் எல்லப்பன், மாவட்ட கல்வி அலுவலர்கள் துரை பாண்டியன், பரமசிவம், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர் வினோத்குமார், நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கனக கோவிந்தசாமி மற்றும் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.