திருவண்ணாமலை நகராட்சி ஞானம்மாள் நாராயணசாமி திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் 22,23,25,26,29 ஆகிய வார்டுகளில் பதிவு செய்யப்படும் மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை நகராட்சியில் நடைபெறும் “மக்களுடன் முதல்வர்” முகாமில் இன்று எந்த வார்டுகளுக்கு முகாம் நடைபெறுகிறதோ அந்த வார்டு பொதுமக்கள் மனு வழங்கலாம். வார்டு பொதுமக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மனு வழங்கலாம்.
திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட 39 வார்டுகளில் இதுவரை மொத்தம் 5 ஆயிரத்து 7 நூற்று 64 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.மேலும் “மக்களுடன் முதல்வர்” முகாமில் இ-சேவையில் பட்டா மாற்றம், குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, பெயர் மாற்றம் போன்ற சேவைகளுக்கு ரூ.30 செலுத்தி பொதுமக்கள் பயன்பெறலாம்.
முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து மக்களுக்காக பெறப்பட்ட மனுக்களில் உடனடியாக தீர்வு காணப்படுகிறதா என நேரடியாக கண்காணித்து கொண்டிருக்கிறார்கள். அரசு அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர்.எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாச்சியர் ஆர்.மந்தாகினி, நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.