நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் மிக நெருக்கமாகவும், அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் புகழேந்தி கட்சியில் இருந்து விலகினார்.
சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்த புகழேந்தி கடந்த சில காலமாகவே கட்சியில் அதிதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென அவர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சீமானின் வார்த்தை மட்டும்தான் அரசியல் என்று நம்பி தொலைத்த நாட்கள் அதிகம் என்று பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
முக்கிய நிர்வாகியான புகழேந்தி நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியிருப்பது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.