தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து அவரது கட்சி தொண்டர்கள் பல ஆயிரக்கணக்கில் திரண்டனர். விக்கிரவாண்டியே ஸ்தம்பிக்கும் அளவுக்கு நேற்று எங்கு பார்த்தாலும் தவெக தொண்டர்கள் கூட்டமாகத்தான் இருந்தது. லட்சகக்ணக்கான தொண்டகர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாடு முடிந்த நிலையில், தற்போது மநாட்டு திடலில் பல இடங்களில் நொறுங்கிய நிலையில் சேர்களும், பிளாஸ்டிக் பாட்டில்கள் மலை போல குப்பைகளாக தேங்கி கிடக்கின்றன. 85 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டு சுமார் 75 ஆயிரம் நாற்காலிகளுடன் பிரம்மாண்ட ஏற்பாடுகளை தவெக கட்சி நிர்வாகிகள் செய்து இருந்தனர். மாநாட்டிற்கு சரியாக 4 மணிக்கு விஜய் வந்தார். கட்சியின் கொள்கைகள் வெளியிட்ட பிறகு விஜய் பேச தொடங்கினார். 45 நிமிடங்கள் விஜய் தனது உரையை நிகழ்த்தினார்.
மாநாடு 7 மணியளில் முடிந்த பிறகு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த தவெக கட்சியினர் தங்கள் வாகனங்களில் சொந்த ஊர் சென்றனர். இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் இன்ச் இன்ச் ஆக நகர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளகினர். பல மணி நேரத்திற்கு பிறகே இந்த வாகன நெரிசல் சரியானது.

மாநாட்டு திடலில் நாற்காலிகள் பலவும் சேதம் அடைந்து நொறுங்கி கிடந்தன. பல்வேறு தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த தடுப்புகள் கூட இருந்த இடமே தெரியாத அளவுக்கு அடையாளம் தெரியாத மாறி கிடக்கின்றன. நாற்காலிகள் உடைந்து நொறுங்கியும், சில தடுப்புகள் உடைந்தும் அந்த இடமே சின்னாபின்னாமாகி கிடக்கிறது. தற்போது மநாட்டு திடலில் பல இடங்களில் நொறுங்கிய நிலையில் சேர்களும், பிளாஸ்டிக் பாட்டில்கள் மலை போல குப்பைகளாக தேங்கி கிடக்கின்றன.