புதுவயல் டி.ஜெ.எஸ். என்ஜினயரிங் கல்லூரியில், ‘கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டி’ சீசன் 2-வை டி.ஜெ. கோவிந்தராஜன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இதய ஆரோக்கிய விழிப்பு உணர்வு பிரச்சாரத்தின் ஒரு அங்கமான ‘ரோட்டரி, தொழில் வளாக உற்பத்தியாளர் சங்கம் (கும்மிடிப்பூண்டி), சோழவரம் முதல் ஸ்ரீசிட்டி மனிதவள மன்றம் (எஸ்2எஸ்), அலமேலு அறக்கட்டளை (புற்றுநோய் விழிப்புணர்வுக்காக)” உடன் இணைந்து சென்னையில் உள்ள முன்னணி பன்னோக்கு மருத்துவமனையான பிரசாந்த் மருத்துவமனையுடன் ணைந்து 2 வது சீசன் ‘கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டி `2024 தொடக்க நிகழ்ச்சி நேற்று டி.ஜெ.எஸ். என்ஜினியரிங் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இளைஞர்கள் இளம் வயதிலேயே இதயம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் இவ்வேளையில் இதய நோய் தொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இதய ஆரோக்கியத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாகவும் இந்தப் போட்டியில் கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 36 அணிகள் பங்கேற்கின்றன.
டிஜெஎஸ் குழும கல்வி நிறுவனங்களின் தலைவரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ. கோவிந்தராஜன் தொங்கி வைத்தார். பிரசாந்த் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் பிரசாந்த் கிருஷ்ணா, தலைமை நிர்வாக அதிகாரி மருத்துவர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த ஜெ.ராஜரத்தினம், பி.ரவிக்குமார், ஏகேஎஸ். ரவி ராமன், எம்.ஸ்ரீநாத், கே.ராஜகோபாலன், ஜி.எம்.கிருஷ்ணமூர்த்தி, டிஜெஎஸ். கல்விக் குழுமத்தின் இயக்குநர் தமிழரசன், வெற்றி, டிஜெஎஸ். என்ஜினியரிங் கல்லூரி முதல்வர் பிரகாஷ், டிஜெஎஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் வி.லட்சுமிபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
14 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 50 ஆயிரமும், இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 25 ஆயிரம் ரூபாயும் பரிசு வழங்கப்படுகிறது.