தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை போலீசார் அமல்படுத்தவில்லை. இதனால் போலீசார் மீது ஆர்எஸ்எஸ் சார்பில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு, ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்றும், நியாயமற்ற முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை நீதிபதி ஏற்றுக் கொண்டு, கோர்ட் அவமதிப்பு வழக்குகளை முடித்து வைத்தார்.
“இது, போன்ற அணிவகுப்புகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தும் போது பேனர்கள், பதாகைகள் எடுத்துச் செல்வதாக இருந்தால், அதற்கு முன்வைப்பு தொகையை செலுத்த வேண்டும். பொது சொத்துகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் வைப்பு தொகையை திரும்ப பெற முடியாது” என்றும் உத்தரவிட்டார்.