திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் தேர்வு நிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 1 முதல் 8 வரையிலான வார்டு பொதுமக்களுக்கு மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.
பேரூராட்சி மன்ற தலைவர் கே.டி.ஆர். பழனி அனைவரையும் வரவேற்றார். திருவண்ணாமலை மாவட்ட திட்ட அலுவலரும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக செய்யாறு சர்க்கரை ஆலை இயக்குனரும் திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான எம்.எஸ். தரணிவேந்தன் நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
களம்பூர் தேர்வுநிலை பேரூராட்சியில் 8 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு 649 மனுக்களை அளித்தனர். இதில் உடனடியாக 25 க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வுகள் காணப்பட்டு பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் களம்பூர் தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் உமா மகேஸ்வரி, பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் அகமத்பாஷா, போளூர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அமுல், மாவட்ட கண்காணிப்பு உறுப்பினர் கே.வி. ராஜ்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் கே.வி.சேகரன், எதிரொலி மணியன், ஒன்றிய குழு முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், திமுக நகர செயலாளர் வெங்கடேசன், சேத்துப்பட்டு மேற்கு ஒன்றிய செயலாளர் எழில்மாறன், சேத்துப்பட்டு பேரூராட்சி நகர செயலாளர் இரா.முருகன், திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மணிகண்டன், களம்பூர் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலர் முரளி, மண்டல துணை வட்டாட்சியர் தெய்வநாயகி, வருவாய் ஆய்வாளர்கள் சுரேஷ், செந்தில் நாதன், கிராம நிர்வாக அலுவலர்கள் மகாலிங்கம், மணிகண்டன், பழனி முருகன், பாலாஜி மற்றும் அனைத்து பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.