ரோமில் கொண்டாடப்பட்ட இதுவே முதன்முதலில் பதிவு செய்யப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் விழாவாகும்.
சூரியத்திருப்பமே கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ் பிறந்த நாளுக்கான சரியான பதிவுகள் இல்லாத நிலையில், குளிர்காலம் முடிந்து சூரியத்திருப்பம் நடைபெறுவதாக ரோமானியர்கள் கணித்திருத்த இந்நாளே டிசம்பர் 25 தேர்ந்தெடுக்கப்பட்டது. சூரியக் கதிர்கள் புவியின் மீது விழும் திசை மாறும் நாள் சூரியத்திருப்பம் (சோல்ஸ்டைஸ்) என்றழைக்கப்படுகிறது. மாறிக் கொண்டே வந்த சூரியக் கதிர்களின் கோணம் திரும்பும் நாளில், மாறாமல் நிற்பது போலத் தோன்றுவதால் லத்தீனில் சோல் (சோலார்!) என்றால் சூரியன், சிஸ்டியர் என்றால் நகராமல் நிற்றல் என்பதிலிருந்து சோல்ஸ்டைஸ் என்ற பெயர் உருவானது. கிறித்துவுக்கு முன்பிருந்தே, டிசம்பர் 25இல் தோற்கடிக்க முடியாத சூரியன் (சோல் இன்விக்ட்டஸ்) என்றழைக்கப்பட்ட சூரியக் கடவுளின் பிறந்த நாளாக ‘நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி’ என்ற பண்டிகையைக் கொண்டாடி வந்தனர்.
சம இரவு நாள்
நேர்மையின் சூரியன் என்று சரியான கிறிஸ்துமஸ் சூரியனுடன் ஒப்பிடும் பல செய்யுள்கள் விவிலியத்தில் காணப்படுவதால், இத்தேதி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கன்னி மரியா தூய ஆவியினால் கருவுற்று, இயேசுவுக்குத் தாயாவார் என்று தேவதூதர் கேபிரியேல் அவருக்கு அறிவித்த ‘இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு’ மார்ச் 25இல் கொண்டாடப்படுதிலிருந்து, 9 மாதங்கள் கழித்து டிசம்பர் 25 வருவதாலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்நாள் சமஇரவு (ஈக்வினாக்ஸ்) நாளாக இருப்பலிருந்து சூரியனை யொட்டிய பண்டைய விழாக்களே, வடிவம் மாறின என்பதையும் புரிந்து கொள்ள முடியும். சூரியன் நிலநடுக் கோட்டைக் கடந்து செல்வதால் இரவும், பகலும் சமமாக இருக்கும் சமஇரவு நாள் மார்ச்சிலும், செப்டம்பரிலும் வருகிறது.
யூதர்களின் நம்பிக்கை
லத்தீனில் ஏக்வஸ் என்றால் சமம், நாக்ஸ் (நாட்டிக்ஸ்) என்றால் இரவு என்பதிலிருந்து ஈக்வினாக்ஸ் என்ற சொல் உருவானது. யூதர்களின் நம்பிக்கையின்படி, காப்பவரும், விடுதலை அளிப்பவருமாகக் கருதப்படுபவர் மெசையா. இந்த எபிரேயச் சொல்லுக்கான கிரேக்க மொழி பெயர்ப்பு கிறிஸ்ட்டோஸ் என்பதிலிருந்து, கிறிஸ்துவின் வழிபாடு (மாஸ்) என்ற பொருளில், கிறிஸ்ட்டஸ்-மெஸ்ஸே என்ற பெயர் முதன் முதலில் 1038 ல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்ட்டோஸ் என்பதன் முதல் எழுத்தான கி என்பது கிரேக்க எழுத்தில் ஆங்கில எக்ஸ் வடிவிலிருப்பதால் எக்ஸ்-மஸ் என்று அழைக்கப்பட்டது. கிறஸ்துமஸ், தொடக்கத்தில் முக்கியத்துவம் இன்றியிருந்து 800 களில்தான் முக்கியத்துவம் பெற்றதும், ஆங்கிலேய மறுசீரமைப்புக் காலத்தில் 1647-ல் இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டு, 1660-ல்தான் இங்கிலாந்துப் பாராளுமன்றம் தடையை நீக்கியதும் குறிப்பிடத்தக்கவை!
இனிய கிறித்துமஸ் வாழ்த்துகள்