நாடாளுமன்ற தேர்தல் குறித்து பா.ஜ.க. தலைவர்கள் நேற்று கிருஷ்ணகிரியில் ஆலோசனை நடத்தினார்.
கிருஷ்ணகிரியில் பாராளுமன்ற தொகுதி பாஜக அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
பின்னர் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, மற்றும் தர்மபுரி ஆகிய நான்கு பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் உரையாற்றிய கேசவ விநாயகம், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார். நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து தலைமை கழகம் வழங்கும் ஆலோசனைகளை பெற்று பணியற்றிட வேண்டும்.
தமிழகத்தில் பாஜக நாளுக்கு நாள் வளர்ந்து வரும் கட்சியாக உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பு நம் கட்சியினை நோக்கி உள்ளது. மக்களின் நம்பிக்கையை பாஜக நிறைவேற்றும். கட்சி தலைமை அறிவிக்கின்றன வேட்பாளருக்கு ஆதரவாக தங்களின் கடமையினை சிறப்பாக நிறைவேற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
உடன் மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன், மற்றும் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.