திருவண்ணாமலை, வந்தவாசி அரசு மருத்துவமனையில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை தமிழ்மாறன் (1 மாதம்) கைவிடப்பட்ட நிலையில் 28.10.2023 அன்று கண்டெடுக்கப்பட்டு, அக்குழந்தையை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் பராமரிக்கப்பட்டு 06.11.2023 அன்று குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டது.
தமிழ்மாறன் என்ற இக்குழந்தை திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசின் கீழ் பதிவுபெற்று இயங்கி வரும் சிறப்பு தத்துவள மையத்திடம் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ தத்து வழங்க ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குழந்தையை உரிமம் கோருபவர் எவரேனும் இருப்பின் உரிய ஆதாரங்களுடன் இவ்வறிவிப்பு வழங்கப்பட்ட 7 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், சமூகப்பாதுகாப்புத்துறை, திருவண்ணாமலை என்ற அலுவலகத்தினை அணுகுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.