திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி மற்றும் தனியார் வேர்கள் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து நடத்திய பிளாஸ்டிக் அற்ற வாணியம்பாடியை உருவாக்குவோம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் கோபாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவங்கி வைத்தார். இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு நியூடவுன் இஸ்லாமிய கல்லூரியில் இருந்து நகராட்சி வழியாக மலங்குரோடு, உழவர் சந்தை சிஎல்.ரோடு வழியாக பேருந்து நிலையம் வரை மாணவிகள் நெகிழி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பின்ன பேருந்தில் பயணம் செய்த பயனாளிகளுக்கு துண்டு பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் நெகிழியை பயன்படுத்த வேண்டும்.
பசு, நாய் கால்நடைகள் விலங்குகள் போன்றவை உணவுடன் நெகிழியை உட்கொள்வதால் உணவு குழல் அடைக்கப்பட்டு துன்புறவும் மரணம் அடையவும் ஏதுவாகிறது இது போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசங்கங்களை பொதுமக்கள், வாகன ஓட்டுக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரிகள் ஆகியோருக்கு வழங்கினர்.
இஸ்லாமிய பெண்கள் கல்லூரி நிறுவன தலைவர் டாக்டர்.ரேணு வேர்கள் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வடிவேலு சுப்ரமணியம் மற்றும் மாணவ மாணவியர்கள் வேர்கள் அறக்கட்டளை இளைஞர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.