திருவண்ணாமலையில் அட்மா திட்டம் சார்பில் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.
உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் ராமநாதன் தலைமை வகித்தார். விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் மணிமாறன் முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் புஷ்பா, உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் சவுந்தர் ஆகியோர் திட்டங்கள் குறித்து பேசினர். நுண்ணீர் பாசனம் குறித்து சேத்துப்பட்டு வேளாண் அலுவலர் முனியப்பன் பேசினார்.
கால்நடை மருத்துவர் ஆரிப், துணை வேளாண்மை அலுவலர் ஏழுமலை, உதவி வேளாண்மை அலுவலர் ராஜாராம், தோட்டக்கலை அலுவலர்கள் தீபிகா மற்றும் சரவணன், உதவி விதை அலுவலர் கம்பைச்சிவன் ஆகியோர் பல்வேறு தலைப்புக்களில் உரையாற்றினர்.
கூட்டத்துக்கான ஏற்பாடுகளை திட்ட மேலாளர் சேகர், உதவி மேலாளர் வினோத் செய்திருந்தனர்.