விவசாயி மனைவி வழக்கு முடித்து வைப்பு
ஐகோர்ட்டு உத்தரவு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யறு அருகே சிப்காட் விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தப்போவதை எதிர்து விவசாயிகள் போரட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக விவசாயிகள் இயக்கித்தின் ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் உள்பட 22 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அருள் ஆறுமுகம், பச்சைப்பன் உள்பட 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் கடந்த நவம்பர் – 15 தேதி உத்தரவிட்டார்.
6 பேருக்கு எதிரான உத்தரவை அரசு திரும்ப பெற்றது. ஆனால், அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்டத்தை மட்டும் ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் அருள் ஆறுமுகத்தின் மனைவி பூவிழி கிர்த்தான ஆட்கொணர்வு வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அருள் ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பிறபித்த உத்தரவு கடந்த 4 தேதி பதிவு செய்து கொண்ட நீதிபதி, பூவிழி கிர்த்தனா தொடர்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.