மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தபடும் பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தை சேர்த்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்,
கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற 9, 10 -ம் வகுப்பில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் வங்கி விவரங்களுடன் தமது வருமானச்சான்று, சாதிச்சான்று நகல்களுடன் சம்மந்தப்பட்ட பள்ளி தலமையாசிரியர்கள் மாணவிகளின் விவரங்களை இ,எம்,ஐ,எஸ் இணயைதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் எனவே , மாணவிகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து உதவித்தொகை பெற்றிட வேண்டும் ” என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.