45 ஆண்டுகளுக்கு பின் முன்னான் மாணவ-மாணவர்கள் 60 பேர் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து மகிச்சி கொண்டாடினர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரிப் பேட்டை அரசு மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 1979-80 ஆண்டில் 10 வகுப்பு படித்த 60 முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் பங்கேற்க வருகை தந்த முன்னாள் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை வரவேற்று ஆசி பெற்றனர். பள்ளியில் மாணவர்களுடன் தங்களது அனுபவங்கள் குறித்து ஆசிரியர்கள் பகிர்ந்து கொண்டனர். அதேபோல் ஆசிரியர்கள் தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம், கற்றலில் தூண்டுதல், ஒழுக்கம் குறித்து முன்னாள் மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
முன்னதாக 15 வயதில் மாணவ பருவத்தில் பிரிந்து 60 வயதில் மீண்டும் சந்தித்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைப்பதாகவும், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த போது தங்களது அன்பை வெளிப்படுத்திக்கொண்டு பள்ளி, கல்லூரி வாழ்க்கை, குடும்பம், வேலை உட்பட தங்களது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து மனம் விட்டு பேசி மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இறுதியாக பள்ளி வளர்ச்சியில் உறுதுனையாக இருந்து, பள்ளி புரவலர் திட்டத்தின் மூலம் உதவிகள் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.