சென்னையில் மழைநீர் வடிந்த பல்வேறு இடங்களில், ஏழை, எளிய மக்கள் இருக்கக் கூடிய பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.இம்மருத்துவ முகாம் மூலம் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.
நற்செய்தி என்னவென்றால் மழைக்குப் பிறகு தொற்று நோய் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக வார் மெமோரியல் பகுதியில் உள்ள அன்னை சத்யா நகரில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினையும், கொசுத் தடுப்பு நடவடிக்கைகளையும் ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.