வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாட்டு வண்டியில் வந்து அயல்நாட்டு மாணவர்களுடன் பொங்கல் விழா கொண்டாடினார். அப்போது பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் பொங்கல் விழாவானது கொண்டாடப்பட்டது. பாரம்பரிய தப்பு மற்றும் மேளங்கள் முழங்க பொங்கல் பானைகள் வைக்கப்பட்டது.
பெண்கள் காளைகள் பசுக்கள் உள்ளிட்ட வடிவங்களில் அரசு ஊழியர்கள் வண்ண வண்ண கோலமிட்டனர். மேலும் பாரம்பரிய உடையினை அணிந்து அயல்நாட்டு மாணவ, மாணவிகளும் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வேட்டி சட்டையுடன் மாட்டு வண்டியில் வந்தார்.