ஆற்றுப்படுகைகளில் மணல் திருடி வந்த 7 மாட்டு வண்டிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம ஆற்று படுகைகளில் ஆற்று கனிமங்கள் உள்ளிட்ட ஆற்று மணல் மேடுகளை ஒரு சில அரசியல்வாதிகள் ஆதரவோடு ஆற்று மணல் தினந்தோறும் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
ஆற்று படுகைகளில் மணலை கொள்ளை அடித்து வருவதால், ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பொதுமக்களிடமிருந்து தொடர் மணல் கடத்தல் நடைபெறுவதாக, ஆரணி வட்டாட்சியருக்கு தொடர்ந்து வரப்பெற்ற ரகசிய தொலைபேசி தகவலின் பேரில், கடந்த 27-ம் தேதி இரவு முதல் வருவாய்த் துறையினர் ரோந்து பணியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் குண்ணத்தூர் மண்டலம் நாக நதிக் கரையிலிருந்து மணல் திருடி கடத்திக்கொண்டு, அக்ராபாளையம் ஏரிக்கரை மீது வந்த 7 மாட்டு வண்டிகளை வருவாய்த்துறை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த வண்டிகளை ஓட்டி வந்தவர்கள் கீழே குதித்து தப்பி ஓடி விட்டனர்.
வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் அந்த 7 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அந்த 7 மாட்டு வண்டிகளின் உரிமையாளர்க ளான, 1. முருகன், 2. சரவணன், 3 கார்த்தி, 4. சந்தோஷ், 5.சங்கர், 6. பாண்டியன், 7. பாபு ஆகியோர் மீதும் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.