நாடு முழுவதும் 63 நபர்களுக்கு ஜேஎன்1 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவா மாநிலத்தில் 34 பேருக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஜேஎன்1 என்ற புதிய வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 9 நபர்களுக்கும், கர்நாடக மாநிலத்தில் 8 நபர்களுக்கும், கேரளாவில் 6 நபர்களுக்கும், தமிழ்நாட்டில் 4 பேருக்கும், தெலுங்கானாவில் 2 நபர்களுக்கும் இந்த புதிய வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் ஜேஎன்1 வைரஸ் பரவல் அதிகரித்து வந்தாலும் உடனடியாக எந்த அபாயமும் இல்லை. ஏனென்றால் இதில் பாதிக்கப்பட்ட 92 சதவீதம் பேர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இதனால் மிதமான பாதிப்புகள் தான் இருக்கும் என தெரிகிறது.