வாணியம்பாடி, வளையாம்பட்டு, விஜிலாபுரம், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக வந்த தகவலின் பேரில், வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில், காவல் ஆய்வாளர் பழனி மற்றும் காவலர்கள் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
விஜிலாபுரம் பகுதியில் சுற்றித் திரிந்த வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த அஜீத்குமார் (23), தீனா (23) கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (22), வேலூரைச் சேர்ந்த விக்னேஷ் (21) ஆகிய 4 பேரும் கஞ்சா விற்பனை செய்து வருவது தெரியவந்தது. காவல் துறையினர் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.