பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் சரகத்தில் நடத்திய சோதனையில் 31 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ரூ. 1.71 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என்று வட்டார போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கும் கர்நாடக மாநிலம் பெங்களூர், தெலங்கானா மாநிலம் ஐதராபாத் போன்ற இடங்களுக்கும் தினமும் இயக்கப்படுகின்றன.
வேலூர், திருவண்ணாமலை போன்ற ஊர்களில் இருந்தும் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அதிகளவில் ஆம்னி பஸ்கள் இயக்கப்படும். பண்டிகை காலங்களில் ஏசி ஆம்னி பஸ்களுக்கு 20 சதவீதமும், சொகுசு ஆம்னி பஸ்களுக்கு 25 சதவீதமும் கட்டணத்தை உயர்த்தி பயணிகளிடம் வசூலிக்கப்படுவதாக புகார் உள்ளது. இதை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
நேற்று – போகி பண்டிகை நேற்றும், தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை 15 தேதி (இன்று) மாட்டுப் பொங்கல் 16-ந் தேதியும், 17-ந்தேதி காணும் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. இதனால் 13 தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்து சிலர் லாபம் பார்க்கின்றனர். இதனை தடுக்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சார்பில் போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் உத்தரவின்பேரில், வரும் 18 தேதி வரை சிறப்பு குழுக்கள் அமைத்து, டோல்கேட்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, வேலூர் சரகத்திற்கு உட்பட்ட ராணிப்பேட்டை வேலூர். திருப்பத்தூர், கிருஷ்ணகிரி. போக்குவரத்து அலுவலகம் சார்பில், வேலூர் சரக துணை போக்குவரத்து ஆணையர் நெல்லையப்பன் தலைமையில் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், ராமலிங்கம், ராமகிருஷ்ணன், காளியப்பன், துரைசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், ராஜேஷ்கண்ணன், அமர்நாத், சிவக்குமார். செங்குட்டுவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 10-ம் தேதி இரவு முதல் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர்.
ஒசூர் ஆகிய வட்டார இந்த சோதனையில் பிற மாநில வாகனங்கள் சாலை வரி செலுத்தாமல் இயக்குவது உள்பட பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வேலூர் சரகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை 285 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது.
31 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, ரூ.1.71 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இச்சோதனை வரும் 18 தேதி வரை தொடரும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.