கொத்தூர் சோதனைச் சாவடி வழியாக காரில் வெளி மாநில மது கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து 1,392 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தூர் சோதனைச் சாவடி பகுதியில் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் வாணியம்பாடி மது விலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
கர்நாடகா மாநிலம் கோலார்தங்கவயல் (கே.ஜி.எப்)
பகுதியில் இருந்து கொத்தூர் சோதனைச் சாவடி வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது பெட்டிகளில் 1,392 மது பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காரில் வந்த திருப்பத்தூர் அடுத்த பாச்சல் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 27), முத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சதீஷ் (25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்கள் வந்த கார் மற்றும் 1 லட்சம் மதிப்பிலான மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
சம்பவம் குறித்து வாணியம்பாடி மது விலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட இருவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.