தமிழகத்தில் நடப்பு 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் விவரங்கள் தலைமை ஆசிரியர்கள் மூலமாக பெறப்பட்டு வருகிறது.
தனித் தேர்வர்களாக தேர்வு எழுதுபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே நேரடித் தனித் தேர்வராக பிளஸ் 1 பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத தேர்வர்கள் அனைவரும் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கும், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.
காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை, மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்க சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.
அதே சமயம், இந்த காலக்கட்டத்திற்குள் விண்ணப்பிக்க தவறுபவர்கள் தட்கல் (சிறப்பு அனுமதி) முறையில் ஜனவரி மற்றும் 12ஆம் தேதிகளில் தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ரூ.1,000 மற்றும் 10ஆம் வகுப்பிற்கு ரூ.500 சிறப்பு கட்டணமாக ஆன்லைனில் செலுத்தி கொள்ளலாம்.
நடப்பாண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள், வரும் 27ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விண்ணப்பிகலாம் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.