சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 72 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு.
திருவண்ணாமலை அருகே 2022 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அவ்வழியாக வந்த பழையனுார் கிராமத்தைச் சேர்ந்த குள்ளன் (72) என்பவர் சிறுமி தனியாக விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து ஆட்கள் நடமாட்டம் ஏதும் இல்லாததால், சிறுமியை தூக்கிச் சென்று அருகில் இருந்த மறைவான பகுதியில் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
தச்சம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து குள்ளனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குள்ளனுக்கு நேற்று நீதிபதி பார்த்தசாரதி 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு தரப்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்தார்.