திருவண்ணாமலை வட்டம் ஊராட்சிகளில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் சட்டப்பேரவை துணைத தலைவர் கு.பிச்சாண்டி, மாநில தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மங்கலம், பாலானந்தல், ராந்தம், நூக்கம்பாடி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்தவர்களுக்கு மங்கலம் ஊராட்சியில் உள்ள எம்.கே.ஜி திருமண மண்டபத்திலும், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அல்லப்பனூர், அகரம்பள்ளிப்பட்டு, எடத்தனூர், தென்முடியனூர்,
புத்தூர்செக்கடி, திருவிடத்தனூர், ராயண்டபுரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு தென்முடியனூரில் உள்ள பெண்ணையாறு பிரிவு பொதுப்பணித்துறை அலுவலகத்திலும், செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்ணக்குருக்கை, அசுவநாகசுரனை, பீமானந்தல், சே.அகரம்,
சின்னகோலாப்பாடி, பாச்சல், பாலியப்பட்டு, பெரியகோலாப்பாடி, பெரும்பாக்கம், உச்சிமலைக்குப்பம், விண்ணவனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு எறையூர் ஊராட்சி ஸ்ரீபாலாஜி திருமண மண்டபத்திலும் நடைபெற்றது.

முகாம்களில் மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சரண்யா தேவி, திருவண்ணாமலை ஒன்றியக்குழுத்தலைவர் கலைவாணி கலைமணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி எஸ்.ஆறுமுகம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிகால் ஊராட்சியில் உள்ள வேங்கிக்காலில் உள்ள ஏ.எஸ் திருமண மண்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை பதிவு செய்து ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி பயனாளிகளுக்கு நலத்திடட உதவிகள் வழங்னார்.
தொடர்ந்து, கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோ.நம்மியந்தல், ஆராஞ்சி, கானலாப்பாடி, ஐங்குணம், கடம்பை, சோமாசிபாடி, கழிக்குளம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மக்களுடன் முதல்வர் முகாமில் மனுக்களை அளித்து பயன்பெறும் வகையில் சோமாசிப்பாடி புதூர் கிராமத்தில் உள்ள சரவணபவ மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்கள் மனு அளித்து பதிவு செய்யப்படுவதையும் பார்வையிட்டு மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.