தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் திரைபடத்தின் படபிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் அந்த திரைப்படம் பொங்கலுக்கு ரீலீஸாகுமா என சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரையுலகில் வட்டாரத்தில் பல்வேறு தகவல்கள் பேசப்பட்டு வருகிறது. இது பற்றி சினிமா துறையினரிடம் நாம் பேசிய போது பெங்கலுக்கு ரஜினி மகள் இயக்கிய லால் சாலம் திரைப்படம் வெளியாவதில் மிகுந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது உண்மை தான்.
தைத் திருநாளான பொங்கல் அன்று சிவகார்திகேயேன் நடித்த அயலான், தனுஷின் கேப்டன் மில்லர், சுந்தர்சியின் அரண்மணை 4 உள்ளிட்ட படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்ட நிலையில் லால் சலாம் திரைபடத்தின் வெளியீடு குறித்து அதிகாரிப்பூர்வ பணிகள் ஏதும் நடைபெறுவதாக தெரியவில்லை. அதேபோல லால் சலாம் திரைபடத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு எதுவும் இல்லை என ஒரு தகவல் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் ரஜனிகாந்த் கௌரவ தோற்றத்தில் வந்துபோவதை தவிர வேறு எதுவும் படத்தில் பெரிதாக இல்லை என்பதால் லால் சலாம் வெளியீடு குறித்து எந்த பரபரப்பும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாக இருப்பதாக தெரிகிறது. அதே போல இளைய நடிகர்களின் திரைப்பட ட்ரைலர்கள் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் லால் சலாம் படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்குமா? என்ற சந்தேகமும் படக்குழு தரப்பிற்கு இருப்பதாக தகவல்கள் பரவி கிடக்கிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் வெளியாவதில் தேதி மாறலாம் என கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க ரஜினி மகள் ஏற்கனவே ரஜினியை வைத்து இயக்கிய கோச்சடையான் படத்தில் மிகப்பெரிய சோதனைகளை ரஜினி சந்தித்தார் என்றும் திரைத்துறையினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.