தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் நேற்று
வெளியாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பீரியட் ஜானர்
ஆக்ஷன் மூவியாக உருவாகியுள்ளது.
கேப்டன் மில்லர் முதல் விமர்சனம்
தனுஷ் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். சத்யஜோதி ஃபிலிம்ஸ்
தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
தனுஷுடன் ப்ரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட
பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார்
இசையமைத்துள்ளார். இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் முதல்
விமர்சனம் வெளியாகி தனுஷ் ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது.
கேப்டன் மில்லரில் முதன்முறையாக தனுஷ் – அருண் மாதேஸ்வரன்
கூட்டணி இணைந்துள்ளது. ஏற்கனவே ராக்கி, சாணி காயிதம் படங்களில்
ராவான வன்முறைக் காட்சிகளுடன் ரசிகர்களை திணற வைத்திருந்தார்
அருண் மாதேஸ்வரன். இப்போது தனுஷுடன் இணைந்துள்ளதால் கேப்டன்
மில்லர் இன்னும் வெறித்தனமான ஆக்ஷன் ட்ரீட்டாக உருவாகியுள்ளது.
இந்தியா விடுதலை ஆகும் முன்னர் நடக்கும் பீரியட் ஜானர் படமாக தனுஷ்
மூன்று விதமான கெட்டப்பில் நடித்துள்ளார். அதில் பிரிட்டிஷ் ராணுவத்தில்
வேலை பார்க்கும் கேப்டன் மில்லர் கெட்டப்பில் தனுஷ் ரொம்பவே
இளமையாக மாஸ் காட்டியுள்ளார். அதேபோல் இன்னும் இரண்டு
கெட்டப்கள் ஆக்ஷனில் தெறிக்கிறது.
பிரிட்டிஷ் ராணுவத்தில்
சேருவதையே தனது லட்சியமாக கொண்டுள்ள தனுஷ், பின்னர் அதில்
இணைந்த பின்னர் அவரது வாழ்வில் நடக்கும் மாற்றங்கள் தான் கேப்டன்
மில்லர் ஒன் லைன் கதை. அதாவது பிரிட்டிஷ் ராணுவம் இந்திய மக்களை
சித்ரவதை செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் உள்ளூர் மக்களுக்காக
புரட்சியில் களமிறங்குவதுதான் கதை.
தனுஷை மக்களுக்காகப் போராட தூண்டும் முக்கியமான கேமியோ
ரோலில் சிவராஜ்குமார் நடித்துள்ளார். ப்ரியங்கா மோகனின் கேரக்டரும்
செம்ம போல்டாக உருவாகியுள்ளது.
சந்தீப் கிஷன் தனுஷ் நண்பராக வந்து
மிரட்டியுள்ளார் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், ஆனால், இரண்டாம்
பாதி யாருமே எதிர்பார்க்காத வகையில் தரமான சம்பவமாக
அமைந்துள்ளதாகவும் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
முக்கியமாக படத்தின் கடைசி 30 நிமிடங்கள் முழுக்க முழுக்க ஆக்ஷனில்
தெறிக்கவிட்டுள்ளது கேப்டன் மில்லர். தனுஷ் இதுவரை இப்படியொரு
ஆக்ஷன் கதைகளத்தில் நடித்ததே கிடையாது எனவும் பாராட்டுகள்
குவிந்துள்ளன. அதேபோல், ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும்
படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளதாக முதல் விமர்சனத்தில் இருந்து
தெரியவந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த பொங்கலுக்கு தனுஷின்
கேப்டன் மில்லர் பாக்ஸ் ஆபிஸ் வின்னர் என செய்திகள் வெளியாகி
வருகின்றன.