உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் அமரன் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார் இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்த வருகிறார் .
படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இசை வெளியீட்டு விழாவில் மணிரத்தினம், லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் இன்று படத்தின் டிரைலர் வெளியாகிறது.
தீபாவளிக்கு மூன்று படங்கள் ரிலீஸ் ஆகின்றன இருந்தும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
இதற்கு முன்பு கமர்சியல் படங்கள் மற்றும் சில சண்டை காட்சிகளை மட்டுமே வைத்து பல படங்கள் சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்துள்ளார் ஆனால் இப்படம் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். நிறைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈர்த்த வண்ணம் உள்ளது.
இன்று 6 மணி அளவில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட உள்ளது