அஜித் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவிருக்கின்றன. இதனால் ஏகே ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.இதனிடையில் அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
சினிமாவில் வெற்றிக் கூட்டணியாக இருப்பவர்கள் அஜித், சிறுத்தை சிவா. இவர்கள் காம்போவில் பல ஹிட் படங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ச்சியாக இவர்களது கூட்டணியில் நான்கு படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இவை அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளன.
இப்படி தொடர் வெற்றி படங்களை கொடுத்துள்ள இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணையவுள்ளனர். இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள இயக்குனர் சிறுத்தை சிவா, ‘அஜித்துடன் கண்டிப்பாக இணைந்து ஒரு படம் பண்ணுவேன், ஆனால் நான் அதை சொன்னால் சரியாக இருக்காது. அஜித் சார் அவர்களே அறிவித்தால்‘ நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக சிறுத்தை சிவா, அஜித் இருவரும் ஐந்தாவது முறையாக இணைகின்றனர். இப்படம் ‘ஏகே 64’ ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஏகே ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.