புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காத காரணத்தினால் தொடர் மழையில் கடும் சிரமத்துடன் மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக காவிரி கடைமடை பகுதியில் 6 நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதேபோல் புதுச்சேரியிலும் அதிகாலை வரை கன மழை பெய்து வந்தது. காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.இருப்பினும் புதுச்சேரியில் விடுமுறை அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக மழையிலும் நனைந்தபடி மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர். கடும் சிரமத்துடன் பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து சென்று விட்டனர்.