சின்னசேலம் அருகே கிராம நிர்வாக அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்த கிராம உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம் கச்சிராயபாளையம் வடக்கனந்தல் மேற்கு அலுலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக தமிழரசி என்பவர் பணிபுரிந்து வருகிறார். கிராம உதவியாளராக அதை ஊரைச் சேர்ந்த சங்கீதா என்பவர் பணிபுரிந்து வந்தார்.
சென்ற மூன்று மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் தமிழரசியை அறையில் வைத்து பூட்டிவிட்டு ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் அதன் பின் அருகில் உள்ளவர்கள் பூட்டை உடைத்து தமிழரசியை மீட்டனர்.
இதுகுறித்து கிராம உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்ததன் பேரில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், கிராம உதவியாளரை தற்காலிக பணி நீக்கம் செய்தார்.
இதனையடுத்து கிராம உதவியாளர் சங்கீதா தற்கொலைக்கு முயன்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று கிராம நிர்வாக அலுவலர் தமிழரசியை பழிவாங்கும் எண்ணத்துடனும், அசிங்கப்படுத்தும் நோக்கத்தில் அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருக்கும் தமிழரசி மீது சாணியை கரைத்து ஊற்றியும், கொலைவெறி தாக்குதல் நடத்தியும் அரசு பணி செய்யவிடாமல் தடுத்தத்திற்காக கிராம உதவியாளர் சங்கீதா மீது கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
புகார் மனுவை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான கிராம நிர்வாக அலுவலர் தமிழரசி 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.