செஞ்சி சட்டமன்ற தொகுதி எதப்பட்டு ஊராட்சியில் இருந்து திருவண்ணாமலை, போளூர் ஆகிய வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டமன்ற தொகுதி மேல்மலையனூர் ஒன்றியம் எதப்பட்டு ஊராட்சியில் இருந்து திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய நகரங்களுக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையினை ஏற்று எதப்பட்டு ஊராட்சியில் இருந்து திருவண்ணாமலை போளூர் ஆகியவழித்தடத்தில் புதிய பேருந்துசேவை இயக்கம் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மேல்மலையனூர் வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயந்தி பழனி ஆகியோர் முன்னிலை வகித்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி சம்பத் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு எதப்பட்டு ஊராட்சியில் இருந்து திருவண்ணாமலை, மற்றும் போளூர் ஆகிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக எதப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் மத்திய அரசின் மாநில அரசிற்கான குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நூலகங்கள் திட்டத்தின் கீழ் 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நூலக கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்தில் திறந்துவைத்ததையடுத்து நூலகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சாந்தி சுப்பிரமணியன், துணை சேர்மன் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர் செல்வி ராம சரவணன், திருவண்ணாமலை மண்டல துணை மேலாளர் இயக்கம் பார்த்திபன், போளூர் பணிமனை மேலாளர் சீனிவாசன், தொழில்நுட்ப அலுவலர்சிவகுமார், ஒன்றிய நிர்வாகிகள் உதயகுமார், அர்ஷத், ஜி.பி.எஸ்.முருகன், செல்வம், தாஹிரா அப்துல் வஹாப், ரகுராமன், ஜெய்சங்கர்,பெருமாள், ரேணு,எஸ்.பி. சம்பத் ,தோப்பு சம்பத்,ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன், கரடிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி,இளைஞர் அணி மணிகண்டன், மாணவரணி ஆறுமுகம்,எதப்பட்டு ஊராட்சி நிர்வாகிகள் அப்துல் வகாப், மருதன், காளி, சத்யா, அய்யாகண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.