தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியின் சாதாரண கூட்டமானது இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்ற நிலையில், கூட்டத்தின் போது 27 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு விவாதத்திற்க்கு எடுத்துக்கொல்லப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக உறுப்பினர் ஒருவர் எழுந்து இதற்கு முன்பு நடைபெற்ற கூட்டம் தொடர்பாக மினிட் புக்கில் நகர மன்ற தலைவி சில திருத்தங்கள் மேற்கொண்டு சட்ட விரோதமாக சில செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இவருக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், கூட்டமானது காரசாரமானது.
தொடர்ந்து, திமுகவை சேர்ந்த உறுப்பினரான ரஹீம் என்பவர் எழுந்து திமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அதிமுக உறுப்பினர்கள் செயல்படுவதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில் ஆவேசம் அடைந்த அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடவே கூட்டமானது ஒத்திவைக்கப்படுவதாக நகர் மன்ற தலைவி கூறிவிட்டு வெளியே சென்றார்.
இதற்கு அதிமுக 19-வது வார்டு உறுப்பினரான முத்துப்பாண்டி என்பவர் எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற தலைவி ராமலக்ஷ்மியை மறித்து கூட்டத்தை நடத்தியே ஆக வேண்டும் எனவும், மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் எனவும் கூறி பிரச்சனையில் ஈடுபட்ட நிலையில், இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து, நகராட்சியில் இருந்து வெளியேற சென்ற நகர் மன்ற தலைவியான ராமலட்சுமியை, கவுன்சிலரான முத்துப்பாண்டி என்பவர் கடுமையான வார்த்தைகளால் பேசி எச்சில் துப்பிய நிலையில், ஆவேசம் அடைந்த நகர் மன்ற தலைவியான ராமலட்சுமியும் பதிலுக்கு கடுமையான வார்த்தைகளால் வசை பாடிய நிலையில் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, ஒருவருக்கொருவர் மாறி மாறி வசைபாடி விட்டு அங்கிருந்து சென்ற நிலையில், நகர்மன்ற தலைவிக்கும் அதிமுக உறுப்பினர்களுக்கும் இடையே நடைபெற்ற இந்தப் பிரச்சினையால் நகராட்சி வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.