திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில்,100 நாள் வேலை திட்டத்தில் 6 வாரங்களுக்கு மேல் உள்ள சம்பள பாக்கியை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ஆறுச்சாமி தலைமையேற்று பேசினார். ஒன்றிய செயலாளர் முருகேசன், ஒன்றிய பொருளாளர் முருகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வைத்து பேசினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றிய தலைவர் ஆர்.எஸ்.பெரியசாமி, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் பங்கேற்று போராட்டத்தை வாழ்த்திப் பேசினர்.
இப் போராட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் 6 வாரங்களுக்கு மேல் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்கிட வேண்டும். 100 நாள் பயனாளிகளுக்கு தொடர்ச்சியாக வேலை வழங்கிட வேண்டும். திட்டம் சிறப்பாக செயல்பட ஒன்றிய அரசின் வரும் பட்ஜெட்டில் ரூ 4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 200 நாள் வேலையும், தினக்கூலி ரூ 600 வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோசமிட்டனர்.
இதேபோல் ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.