பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நேற்று ஆலோசனை நடத்தியது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு இன்று முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்.நாளை (பிப்ரவரி 1ம் தேதி) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து இருந்தது. இதில், நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றம் சுமூகமாக செயல்பட எதிர்க்கட்சிகள் அனுமதித்தால் மட்டுமே அனைத்து விவகாரங்களையும் எளிதாக விவாதிக்க முடியும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கேட்டுக்கொண்டுள்ளார்.