வேலூர், அக். 17-
வேலூர் மாநகரத்துக்குட்பட்ட வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கோட்டை சுற்று வளாகத்தில் உள்ள 30 அடி உயர பூ மரம் நேற்று காலை 6 மணி அளவில் திடீர் எதிர்பாராத விதமாக சாலையில் அமைக்கப்பட்டிருந்த மீன் கம்பத்தின் மேல் விழுந்து,
இதனையடுத்து மரமும், மின்கம்பமும் சேர்ந்து கோட்டை சுற்று சாலையில் உள்ள தள்ளுவண்டி கடை மேல் மேல் விழுந்துள்ளது. இதில் அந்த தள்ளுவண்டி கடை நசுங்கி தேசமடைந்தது.
அருகே இருந்தவர்கள் இதுகுறித்து மின் அலுவலகத்திற்கும், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பெயரில் விரைந்து வந்த மின்துறையினர் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் உள்ளே யாரேனும் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என சோதனை செய்ததில் யாரும் இல்லை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் மரம் அறுக்கும் இயந்திரத்தை வைத்து மரம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்
இந்த சாலை எப்பொழுதுமே அதிக அளவு ஆள் நடமாட்டம் உள்ள பரபரப்பான சாலை ஆகும். ஆனால் இந்த பாதையில் யாரும் இல்லாத நேரத்தில் மரம் விழுந்ததால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.