புழலில் ரூ. 11.90 கோடியில் சென்னை கால்பந்து விளையாட்டு திடல் மேம்பாட்டு பணி மற்றும் பள்ளி கட்டிடப்பணிகளை அமைச்சர் கே.ஏ. சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை புழல் தந்தை சிவராஜ் விளையாட்டு திடலில் உள்ள கால்பந்தாட்ட திடல் மேம்படுத்தும் பணி ரூ. 2 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
இதேபோல், புழல் காந்தி பிரதான சாலையில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வகுப்பறை கட்டிடங்கள், கணினி அறை, கழிப்பிட கட்டிடம், உடற்பயிற்சி கூடம், அறிவியல் ஆய்வகம், கூட்ட அரங்கம் உள்ளிட்ட பணிகள் சென்னை பெருநகர குழுமம் சார்பில் ரூ. 11 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த 2 பணிகளையும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர குழு தலைவருமான பி.கே. சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.சென்னை வடகிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுதர்சனம் எம்.எல்.ஏ., மாதவரம் மண்டல குழு தலைவர் நந்தகோபால், மாதவரம் வடக்கு பகுதி தி.மு.க. செயலாளர் புழல் நாராயணன், வட்ட செயலாளர் சுந்தரேசன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இருந்தனர்.