புதுப்பாளையம், அக். 17-
புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இறையூர் பகுதியில் மேல்நீர் தேக்க தொட்டி அமைக்க நடைபெற்ற பூமி பூஜையில் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, யூனியன் சேர்மன் சி. சுந்தரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியம் இறையூர் ஊராட்சியில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ், ரூபாய் 14.52 லட்சம் மதிப்பீட்டில், 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நீர் தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சி. சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன் பங்கேற்று புதிய மேல்நிலைத் தேக்க தொட்டி அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் பாரதிதாசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயராஜ், சுந்தரம் அரசு ஒப்பந்ததாரர் செல்வகுமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் வெங்கடேசன், ஊராட்சி செயலாளர் சம்பத், உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் மூத்த முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்