திருவாரூர் நெடுஞ்சாலை துறை கோட்ட அலுவலக ஊழியர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பொது மக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2025 ஆம் ஆண்டிற்காக ஜனவரி மாதம் முழுவதும் சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சாலை விதிகளை கடைபிடிக்கும் வண்ணம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு, திருவாரூர் நெடுஞ்சாலை துறை கோட்ட அலுவலக ஊழியர்கள் சார்பில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஊழியர்கள் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, பாதுகாப்பு முழக்கங்களை எழுப்பியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இறுதியில் பேரணி பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது,
முன்னதாக திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் கோட்ட அலுவலக பொறியாளர் இளம்வழுதி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை இளம்வழுதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்தப் பேரணியில் கூடுதல் உதவி பொறியாளர் மாரிமுத்து, பாதுகாப்பு அழகு பொறியாளர் புவனேஸ்வரி, போக்குவரத்து காவலர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் ஊழியர்கள் ஏறாளமானோர் கலந்துகொண்டனர்.