திருவண்ணாமலை கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பில் டிஜிட்டல் நிதி சுற்றுச்சூழல் அமைப்பில் வரும் போக்குகள் பெண்களின் பொருளாதார அதிகாரமளிப்புக்கான சவால்கள், மற்றும் வாய்ப்புகள் என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கு கல்லூரி துணைத்தலைவர் எ.வ.குமரன் தலைமையிலும் கல்லூரி இயக்குனர் விஜிதா குமரன் முன்னிலையிலும் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் சௌ.சீதாலஷ்மி வாழ்த்துரை வழங்கினார். வணிக துறைத்தலைவர் மகாலட்சுமி வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக முனைவர் ராஜ்குமார் முதல்வர் மற்றும் முனைவர் சரவணன் உதவி பேராசிரியர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். உதவி பேராசிரியர் சங்கீதா சிறப்பு விருந்தினர் சரவணனை அறிமுகப்படுத்தினார்.
“வளர்ந்து வரும் போக்குகள் டிஜிட்டல் நிதி சுற்றுச்சூழல் அமைப்புகளில் உள்ள பெண்கள் பொருளாதார அதிகாரமளிப்புக்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான மாநாடு, ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான உலகளாவிய தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது வணிகவியல் துறையை டிஜிட்டல் நிதி சுற்றுச்சூழல் அமைப்புகளில் வளர்ந்து வரும் போக்குகளுடன் ஒருங்கிணைக்கிறது. இந்த தேசிய அளவிலான கருத்தரங்கு வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கவனம் செலுத்துகிறது என்பதைக் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
இக்கருத்தரங்கில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். என்பதுக்கும் மேற்பட்ட பிற கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். வணிகவியல் துறை உதவிபேராசிரியர் கல்பனா நன்றி கூறினார்.