சங்கராபுரம் அருகே சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டிய பாலம் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை மற்றும் பாவளம் இடையே மணிமுத்தாறு நதியின் குறுக்கே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மேம்பாலம் கட்டி தருவதாக சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் கூறினார்.
அதன்படி சுமார் ஆறு மாதங்களுக்கு முன் அடிக்கல் நாட்டினார், அதன்பிறகு மிகவும் குறைந்த ஆட்களைக் கொண்டு வாரத்திற்கு இரண்டு நாள், ஒரு நாள் மட்டுமே வேலை நடைபெற்று வருவதாக இந்தப் பகுதி விவசாயி பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
இந்த பகுதியாக விவசாய பொருட்களை எடுத்துச் செல்லவோ, பாலத்தை கடந்து செல்லவோ மிகவும் அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அங்கிருந்த வேலை ஆட்களை கேட்டபோது, நாங்கள் இப்படித்தான் செய்வோம். உங்களால் என்ன செய்ய முடியும் என்று கூறுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலையிட்டு மிக விரைவாக பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.