திருவாரூரில் காவலர் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.80 லட்சம் மோசடி செய்த அலுவலர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூரில், காவலர் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில், போலீசார் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் இச்சங்கத்தின் செயலாளர் ஜெயகாந்தன் சங்க நிதியை கையாடல் செய்துள்ளதாக புகார்கள் எழுந்தது.
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2021 முதல் 2023 வரையிலும் ரூ.79 லட்சத்து 54 ஆயிரம் பண மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து செயலாளர் மற்றும் உதவியாளர் முருகதாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவலர் கூட்டுறவு கடன் சங்கத்திலேயே பண மோசடி விவகாரம் போலீசார் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.