கார்கே கடிதம்
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரின் போது ராஜ்ய சபாவில் நடந்த 46 எம்பிக்கள் சஸ்பெண்ட் எதிர்க்கட்சிகளின் அமளி உட்பட பல விஷயங்கள் குறித்து ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவர் கார்கேவுடன் பேச விரும்பியதாகவும், அவர் சந்திக்க மறுத்து விட்டதாகவும் இது தொடர்பாக மீண்டும் சந்தித்து பேசுவோம் என்கிற ரீதியில் கார்கேவுக்கு கடிதம் ஒன்றை துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கர் எழுதி இருந்தார். அதற்கு காங்கிரஸ் கட்சி தலைவரான கார்கே பதில் கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில் கார்கேவுக்கு கடந்த சனிக்கிழமை மீண்டும் ஒரு கடிதத்தை தன்கர் எழுதியுள்ளார். “நாம் முன்னோக்கி செல்ல வேண்டியது அவசியம். இதனால் நாம் இருவரும் டிச.25ஆம் தேதி அல்லது உங்களுக்கு வசதியான நேரத்தில் என்னுடைய அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்து பேசுவோம் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த 2வது கடிதத்துக்கு கார்கே பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.
கார்கே கூறியிருப்பதாவது:
முன்னோக்கி செல்ல வேண்டும் என்ற உங்கள் கருத்தில் உடன்படுகிறேன். ஆனால் சபையை நடத்துவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை என்றால் தலைவரின் அறையில் ஒரு விவாதம் இருக்கக் கூடாது. நான் இப்போது டில்லிக்கு வெளியே இருக்கிறேன். டில்லி திரும்பியவுடன் தலைவரை சந்திப்பதற்கு முன்னுரிமை கொடுப்பேன். எம்பிக்கள் சஸ்பெண்ட் எந்தவித மனப்பூர்வ பயன்பாடும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டன. நீங்கள் சபையின் பாதுகாவலர் என்ற முறையில் பார்லிமென்ட்டில் அரசை பொறுப்பு கூற வைக்கும் மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகும். எம்பி களை இரு சபைகளில் இருந்து சஸ்பெண்ட் செய்வது அரசாங்கத்தால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட தாகவும், திட்டமிடப்பட்டதாகவும் தெரிகிறது. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
இந்த அறிவிப்புகள் குறித்து முடிவெடுப்பது தலைவரான உங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதை நான் அங்கீகரிக்கிறேன். இருப்பினும், உள்துறை அமைச்சர் மற்றும் அரசின் அணுகுமுறையை சபைத் தலைவர் மன்னித்தது வருத்தமளிக்கிறது.இவ்வாறு அந்த கடிதத்தில் கார்கே கூறியுள்ளார்.