திருவண்ணாமலை பெட்ரோல் பங்க் மேலாளரை தாக்கிய 4 பேர் கைது. மேலும் 4 பேரை போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர். வேங்கிக்கால் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட தகராறில் மோட்டார் சைக்கிள்களில் வந்த வாலிபர்கள் அலுவலக மேலாளர் ரகுராமனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
படுகாயம் அடைந்த ரகுராமனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இது சம்மந்தமாக ரகுராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பெட்ரோல் பங்கில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தியதில் திருவண்ணாமலை வேங்கிக்கால் அசோக் நகரை சேர்ந்த மணிவாசன் (27), ஜெகன்நாதன் (21), நேரு நகர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (23), ஏந்தல் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.