நாகூரில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு
நாகை மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் நாகூர் தர்காவில் நடைபெறும் மராமத்து பணிகளை பார்வையிட்டார்
நிதி ஒதுக்கீடு
நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவின் 467- வது கந்தூரி விழாவில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இவ்விழாவில் கலந்து கொண்டேன். சிறுபான்மை இன மக்களை பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.பழமை வாய்ந்த தர்காக்களை புனரமைக்க ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதில் முதல் கட்டமாக நாகூர் தர்காவிற்கு ரூ. 2 கோடி வழங்கப்பட்டுள்ளது ஜெருசலேம் என்ற புனிதயாத்திரை செல்ல நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெற்றி
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு. ஆளுநர் ஆர்.என்.ரவி வந்தது பெருமையாக உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்
நேற்று அதிகாலை நாகூர் தர்கா சந்தனக் கூடு ஊர்வலம் கால் மாட்டு வாசலை அடைந்ததும் சந்தனக் கூட்டில் இருந்து சந்தன குடத்தை இறக்கி ஆண்டவர் சன்னதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் காலை 6 மணி அளவில் பெரிய ஆண்டவர் என்று அழைக்கப்படும் சாகுல் ஹமீது பாதுஷா நாயகம் சமாதிக்கு தர்கா பரம்பரை கலிபா சந்தனம் பூசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.