நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., பதிலடி
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதித்த மக்களை சந்தித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நிவாரண உதவிகளை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் -:
கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு அகில இந்திய இஞைரன்ஸ் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஊழியர்களிடம் நிதியை திரட்டி பல்வேறு தன்னார்வளர்களுடன் இணைந்து நானும் பங்கெடுத்து வழங்கியுள்ளேன். இந்த பேரிடரில் இருந்து மக்கள் அனைவரும் மீள்வதற்கு அரசு மற்றும் அனைவரும் ஒட்டு மொத்தமாக தங்களது பங்களிப்பை செய்ததால்தான் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை மீட்டு கொண்டு வந்திருக்கின்றோம். அனைத்தும் இழந்திருக்கிற மக்களக்கு எவ்வாறு உதவுவது, இந்த துயரத்தில் இருந்து எப்படி மீள்வது, எவ்வாறு பங்களிப்பு செலுத்த வேண்டும் என சிந்திக்காமல் இவற்றை முற்றிலும் திசை திருப்பும் வேலையை ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது. குற்றச்சாட்டு உங்களை நோக்கியும் திரும்பும்.
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றைய தினத்தன்று அளித்த பேட்டி மிக பெரிய காயத்தையும், வருத்தத்தையும் உருவாக்கியுள்ளது. இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ள தமிழ்நாட்டில் தமிழக மக்களுக்கு ஆறுதலாக, ஆதரவாக பேசுவதை விட்டு விட்டு வம்புச் சண்டைக்கு இழுப்பது போல் பேசியிருக்கிறார். இன்றைய தேவை என்பது மக்களுக்கான நிவாரணம். மக்கள் மீள்வதற்கான உதவிகளும் தான்.
தமிழக அரசின் மீது ஒன்றிய நிதி அமைச்சர் 12 ஆம் தேதியே அகில இந்திய வானியல் துறை முறையான அறிவிப்பை செய்து விட்டது. ஆனால் வெள்ளத்திற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக அரசு செய்யவில்லை எனவும் முன் எச்சரிக்கை பணிகள் மேற் கொள்ளபடவில்லை என குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது மிக மிக அபத்தமான குற்றச்சாட்டு மிக தவரானது.
தமிழகத்துக்கு ஏன் இவ்வளவு பாரபட்சம்?
ஒரு பேரிடர் களத்தில் இதை திசை திருப்பும் ஒன்றிய நிதி அமைச்சர், பேரிடர் களத்தில் நின்று தவிக்கும் மக்களுக்கு அற்ப அரசியல் செய்வதை கைவிட வேண்டும். இப்பொழுது தேவை தமிழ் நாட்டிற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிதி. அந்த நிதியை ஒன்றிய அரசு உடனடியாக கொடுக்க வேண்டும். 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி குஜராத்தில் புயல் வீசிய 2 நாட்களில் 18ஆம் தேதி குஜராத்திற்கு போனார் பிரதமர் மோடி பின்னர் 21ஆம் தேதி உடனடியாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால் தமிழகத்திற்கு வருத்தம் தெரிவிக்க அறிக்கை விடுவதற்கு 6 நாள் ஆகிவிட்டது. சென்னையில் புயல் வெள்ளம் சூழ்ந்தது. தமிழ்நாடு என்றால் ஏன் இவ்வளவு பாரபட்சம் என்ற கேள்வி எல்லாரும் கேட்க விரும்புகின்றோம். தயவு செய்து இப்பொழுது தமிழ்நாட்டிற்கு உரிய பேரிடர் நிதியை வழங்குங்கள். மற்ற அரசியல் பேச்சுகளை எல்லாம், விவாதங்களை எல்லாம் அப்புறம் வைத்துக் கொள்வோம் என் கேட்டுக் கொள்கிறோம்.
அதே குற்றச்சாட்டு உங்கள் மீது சுமத்தினால் உங்களை நோக்கியும் திரும்பும். முதலில் பதில் சொல்ல வேண்டியது பிரதமரே! ஏன் என்றால் முதலில் வானிலை மிக அதிக கன மழை பெய்யும் என்று அறிவிப்பை தான் செய்தது. தவிர 1000 சென்டி மீட்டர் அளவுக்கான கன மழை என்று முன்னெச்சரிக்கையை யாரும் செய்யவில்லை. அதனால் தான் 17 ஆம் தேதி காலை அதிக கனமழை கொட்டிக் கொண்டிருந்த போது பாரத பிரதமர் கன்னியாகுமரி முதல் காசிக்கான காவி தமிழ் சங்ககத்தை வீடியோ காட்சி மூலமாக துவக்கி வைத்தார். கள்ளியாகுமரியில் இருந்து அன்றைய தினம் மாலை புறப்படுகிறது. அங்கு காலையிலிருந்து கமைழை கொட்டி இருந்த போது ரயிலை துவக்கி வைக்கிறார்.
வானிலை துறை அறிக்கை பிரதமருக்கு தெரியாதா? ஒன்றிய அரசுக்கு தெரியாதா? கொட்டுகிற பேய் மழையில் ஒரு ரயில் பயணத்தை எப்படி துவக்கி வைக்க முடியும்? அதுமட்டுமின்றி அன்றைக்கு அந்த நிகழ்ச்சி இருந்ததால் நான் தென் மாவட்டங்களில் பல ரயில்களை ரத்து செய்ய முடியவில்லை என பல அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனால் தான் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் 3 மணிக்கு புறப்பட்டது. மாநில அரசின் மீது நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டு உண்மையென்றால் இதற்கு முதலில் பதில் சொல்ல வேண்டியது. இந்திய நாட்டின் பிரதமர் தான். வானிலை துறை அறிக்கையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஒரு ரயில் பயணத்தின் துவக்க நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார் என சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.