நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
சென்னை ஐகோர்ட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு
நடிகைகள் திரிஷா, குஷ்புவிடம் தலா ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு, ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை ஐகோர்ட்டு, வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில், நடிகர் மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்தார். இதற்கு திரைப்பட பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். குறிப்பாக தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆயோர் தங்களது கண்டனத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர்.
இந்த விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைப்படி சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் நடிகர் மன்சூர்அலிகானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் மன்சூர்அலிகான் மன்னிப்பு கோரினார்.
இதை நடிகை திரிஷாவும் ஏற்றுக் கொள்ளும் விதமாக தனது 3 எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் தனது முழு வீடியோவை பார்க்காமல்,பொதுமக்கள் மத்தியில் உள்ள தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பதிவுகளை வெளியிட்ட நடிகைகள் திரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் தலா ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட சென்னை ஐகோர்ட்டில் மன்சூர் அலிகான் வழக்கு தொடர்ந்தார்.
‘உண்மையில் நடிகை திரிஷா தான் மன்சூர் அலிகானிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும். ஆனால், அவரிடம் நஷ்ட ஈடு கேட்டு மன்சூர் அலிகான் வழக்குத் தொடர்ந்துள்ளார்’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை திரிஷா தரப்பில், ‘மான நஷ்ட ஈடு கேட்டு பேருக்கும் எதிராக ஒரே மனுவாக தாக்கல் செய்ய முடியாது. திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மன்சூர் அலிகான் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
அதனால் அவர் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று திரிஷா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்’ என்று வாதிடப்பட்டது. மன்சூர் அலிகான் தரப்பு வக்கீல், ‘நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக ஒரே வழக்காக தொடர முடியும் மன்சூர் அலிகான் பேசிய முழு வீடியோவையும் இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்யதயாராக இருக்கிறேன்’ என்று கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே 3 பேரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதை அவதூறாக கருத முடியாது. பொதுவாக பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் போது அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பது என்பது மனித இயல்புதான். இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
உரிமையியல் நடைமுறைச் சட்டப்படி பேருக்கும் எதிராக ஒரே வழக்கில் மானநஷ்ட ஈடு கேட்க முடியாது. இந்த வழக்கு ஐகோர்ட்டு நேரத்தை வீனடிக்கும் வகையிலும், விளம்பர
அதனால் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கிறேன். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இந்த அபராதத் தொகையை 2 வாரத்துக்குள் சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என நீதிபதி உத்திர விட்டுள்ளார்.