கலசப்பாக்கம் புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த காளைகள் வீதியில் சீறிப்பாய்ந்து ஓடியது.
எருது விடும் விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள் குவிந்தனர். எருதுகளின் கொண்டைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை எடுப்பதில் இளைஞர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். புதுப்பாளையம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.