தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இன்று (23ஆம் தேதி) முதல் 10 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் நேற்று (22ஆம் தேதி) முடிவடைந்தது.
இதன் காரணமாக விடுமுறை விடப்பட்டு பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2 ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.